கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு அவர்கள் தங்குவதற்கு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகள் தரமானதாக கட்டப்பட்டுள்ளதா, அதில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் தரமானதாக உள்ளதா என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.














