ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில் 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றில் 103 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உடைப்பு வெள்ளத்தால் ஏற்பட்டதைவிட ஏரி ஆக்கிர மிப்பாளர்களால் வெட்டி விடப்பட் டது என்பதே உண்மை. திண்டிவனம் ஏரியின் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதே நிலை பல கிராமங்களில் நிலவுகிறது.‘நீர் மேலாண்மை’ என்பது நீராதாரங்களை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது, நீரைச் சேமிப்பது, பயனுள்ள முறையில் பயன்படுத்துவது குறித்து திட்ட மிடுவது, நீரை விநியோகம் செய்வது, நீர் விரயத்தைக் குறைப்பது ஆகிய கொள்கைகளைக் கொண்டதாகும்.
ஆனால் அதற்கு நேர் எதிராக, ஒருநகரம் வளர்ச்சியடைந்தால், முதலில் பலியாவது அங்குள்ள நீர்நிலைகள் தான். அதற்கு அரசு மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. அதற்கு இந்த பொதுமக்கள் உட்பட ஒட்டுமொத்த சமூகமுமே கார ணமாகும். அதிக மழைப் பொழிவு காலங்களில், நீரைத் தேக்கி வைப் பதை கைவிட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது. வெள்ளத்தில் மூழ்கிய சென்னை, அடுத்த 4 மாதங்களில் வறட்சியை சந்தித்தது. அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஏறக்குறைய கைவிட்டாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறிக் கொண்டிருக்க முடியாது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தின் கழிவு நீர் சென்ற பகுதியில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவுள்ள 12 மதகுகள் உள்ள ஏரியை சீரமைத்து ஆழப்படுத்தியதின் விளைவாக, 70 ஆண்டுகளாக ஒரு போகம் விவசாயம் செய்த நிலை மாறி, தற்போது 2 போகம் விவசாயம் செய்கிறார்கள். இதுபோல, ஒவ்வொரு தனி மனிதனும் குழுக்களாக இணைந்து மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக் கையாக உள்ளது.இவ்வளவு மழையிலும் நிரம்பாத திண்டிவனம் ஏரி.














