மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஸ்ரீனிவாசன் (45). தேனி மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (நவ.,1) தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து இரவிபுதூர் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் பைக்கில் மோதியதில் ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி சிந்து ஸ்ரீனிவாசன் மார்த்தாண்ட போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (51) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














