கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை மாநகராட்சி மூலம் ஒப்பந்தம் இடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு இருசக்கர வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 தலைக்கவசத்திற்கு ரூ. 5 கட்டணம் என அறிவித்துவிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அவதியுறுகின்றனர்.