தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற ஐயப்பன் (40). தொழிலாளி. இவர் மீது 2005 ஆம் ஆண்டு நடந்த அடிதடி சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தக்கலை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் 2013ல் சுபாஷை குற்றவாளி என அறிவித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு கோர்ட்டில் சுபாஷ் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஏற்கனவே சார்பு நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து, 4-9-2024 அன்று சுபாஷின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சுபாஷ் தலைமறைவானார். கோர்ட் வரண்டு பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று (30-ம் தேதி) சுபாஷ் சொந்த ஊருக்கு வந்தபோது அவரை தக்கலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.