‘ரிங் ரிங்’ படத்துக்கு பிரம்மாண்ட வீடு செட்

0
152

செல்போனை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘ரிங் ரிங்’. ‘போனின்றி அமையாது உலகு’ என்கிற டேக் லைன் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, கந்தகோட்டை, ஈகோ படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கி உள்ளார். இதில் விவேக் பிரசன்னா, சாக் ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் நடித்துள்ளனர். வசந்த் இசைப்பேட்டை இசை அமைத்துள்ள இதன் பாடல்களை பா. ஹரிஹரன் எழுதியுள்ளார். தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல் தயாரித்துள்ளனர்.

“திருமணத்துக்குப் பிறகு 4 தம்பதிகள் ஃபோனை மாற்றிக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த, விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு படம் உருவாகி இருக்கிறது. பிரம்மாண்ட வீடு செட் அமைத்து படமாக்கினோம். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். ஜனவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார் இயக்குநர் சக்திவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here