சாதாரண மக்களை பிரதமர் மோடியும், பாஜக.,வினரும் வெறுக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி இடம் பெற்ற மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியைடைந்தது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. மதங்கள் மற்றும் ஜாதிகள் இடையே மோதல்கள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார். சாதாரண மக்களை பாஜக.,வினர் வெறுக்கின்றனர். இந்த வெறுப்புக்கு எதிராகத்தான் நாங்கள் போாரடுகிறோம். இதற்கு அரசியல் அதிகாரம் அவசியம்.
அரசியல்சாசனம் மூலம் சாதாரண மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை அம்பேத்கர் வழங்காமல் இருந்திருந்தால், அவர்களால் எம்எல்ஏக்களாகவோ, எம்.பி.க்களாகவோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவோ உருவாகியிருக்க முடியாது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கோ கூறினார்.








