வரும் 2025 பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை வக்பு மசோதா ஜேபிசி பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, வக்பு வாரி யங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப் பப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக பாஜக மக்களவை எம்.பி. ஜெகதாம்பிகாபால் உள்ளார். இக் குழு பல தடவை கூடி, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட் டது. கடந்த 21-ம் தேதி கடைசி
கூட்டம் நடைபெற்றது. அப்போது குளிர்கால கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஜெகதாம்பிகா பால் தெரி வித்தார்.
இதனிடையே இக்குழுவின் பதவிக் காலம் இன்று (நவம்பர் 29) முடிய இருந்த நிலையில், இதை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, வக்பு ஜேபிசி பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை ஜெக தாம்பிகா பால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளுக்குள் இக்குழு தனது பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும்.














