ஈஷா அமைப்பானது கடந்த 16 ஆண்டுகளாக கிராமங்களை மையப்படுத்தி விளையாட்டு போட்டி நடத்தி வருகிறது. அதன்படி இவ்வாண்டு கிராம மக்களுக்கான கைப்பந்து போட்டி குமரியில் கூட்டாலுமூட்டில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடந்தது. முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஈஷா அமைப்பின் சார்பில் கண்ணன், ஜெயன், , கலாம் 2020 மெடிக்கோஸ் தலைவர் தர்மராஜ் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வருடம் ஈஷா கிராமோத்சவ நிகழ்ச்சிகள் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடக்கிறது. டிசம்பர் 28ந் தேதி இறுதிப் போட்டிகள் கோயமுத்தூர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.














