கன்னியாகுமரியில் ஹிந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் மேல்புறம் ஒன்றிய சமய வகுப்பு 1 மாணவர் மாநாடும், ஊர்வலமும் நடைபெற்றது. காலை ஆலுவிளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் மேல்புறம் சந்திப்பு வழியாக ஈஸ்வர கால பூதத்தான் கோயில் சென்றடைந்தது.
தொடர்ந்து மாநாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பிற்பகல் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியா பீட அமைப்புச் செயலாளர் சிவாத்மானந்த ஜி மஹராஜ், குமரி மேற்கு மாவட்ட ஆர். எஸ். எஸ் குடும்ப பிரபோதன் பிரமுக் சதீஸ்குமார், சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ், உள்ளிட்டோர் பேசினர்.














