தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்(நவம்பர் 23) இரவில் மாணவர் தேங்காபட்டணம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடை அருகில் வைத்து எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் மாணவனை தடுத்து நிறுத்தி கட்டிப்பிடித்து செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார்.
மேலும் வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது சம்மந்தமாக மாணவர் தனது தாயாரிடம் தெரிவித்தார். தாயார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் ஜமாலுதீன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.














