ஆறுகாணி: கழிவு வாகனம் சிறைபிடித்த துப்புரவு பணியாளர்கள்

0
182

ஆறுகாணி அடுத்த புளிமூடு(சாந்திநகர்) பகுதியில் வைத்து கடையல் பஞ்சாயத்து ஊழியர்கள் இன்று(22-ம் தேதி) மதியம் 
துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவை மடக்கி பிடித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக ஊழியர்கள் கடையல் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் மற்றும் ஆறுகாணி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  
     பத்துகாணி மற்றும் ஆறுகாணி வார்டு கவுன்சிலர்களும்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் டெம்போவில் இருந்தவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.  
இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி லாரி பிடிபட்ட தகவல் அறிந்த ஊர்மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here