குமரி: 95 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

0
201

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கடைபிடிக்கப்படுவதால் அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது  வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 32 ஆம் தேதி தீபாவளி விடுமுறை தொடர்ந்து , நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சிறப்பு கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 23) இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி இயக்குனரகம்  உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது.   கூட்டத்தில் ஊராட்சிகள் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை சிறப்பிக்கப்பட வேண்டும், மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவிக்க வேண்டும், மேலும் வட கிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட பல  அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here