பார்த்திபபுரம்: கோயிலில் திருட்டு: சிக்கிய கொள்ளையன்

0
190

புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த 13-ம் தேதி கோவில் கருவறைக்குள் இருந்த 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், அங்கிகள் திருட்டு போனது.
மேலும் மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் 8 கிலோ எடையுள்ள உத்சவ மூர்த்தி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்தனர். சிசிடிவி கேமரா பதிவில் இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. பூதப்பாண்டியை சேர்ந்த மரியசிலுவை, மதுரையை சேர்ந்த பிரேம் , புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு நபர் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மரிய சிலுவையை பூதப்பாண்டியில் கைது செய்து விசாரித்த போது, மதுரையை சேர்ந்த பிரேம் என்பவரிடம் சிலை இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மதுரையில் உள்ள பிரேம் வீட்டில் வைத்து பார்த்திபபுரம், மங்காடு முருகன் கோவில்களில் திருடிய 2 ஐம்பொன் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால் பிரேம் தலைமறைவானார்.

இதையடுத்து நேற்று (நவம்பர் 22) இரவு திருடப்பட்ட 2 சிலைகள் மற்றும் மரிய சிலுவையுடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மரிய சிலுவையை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மாயமான மதுரை பிரேம், புதுக்கடை நபர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here