குமரி: பள்ளி மாணவன் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து சாதனை

0
229

மத்திய மாநில அரசுகள் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதத்தில் ஆண்டு தோறும் மெட்ரிக், அரசு பள்ளிகளை இணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறது.
     
அதன்படி  கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய ஜெஃபிரின் என்னும் மாணவன் மேற்கண்ட போட்டிகளில் வென்று மாநில அளவில் ஈரோட்டில் நடந்த ஆறு கிலோ மீட்டர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியானது உத்தரகாண்டில் நடைபெறும்.
       
இந்த சாதனை படைத்த மாணவனுக்கு கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் துளசிதாஸ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தலைவர் குமார், பொருளாளர் சௌந்தரராஜன், துணைத் தலைவர் முருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன் , சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சுனில் உடற்கல்வி ஆசிரியர்கள் அஜீஸ், அனில்குமார், சுதர்சன் ஆகியோர் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here