AUS vs IND முதல் டெஸ்ட் | கே.எல்.ராகுல் சர்ச்சை அவுட்

0
240

பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் கள நடுவர் அவுட் வழங்கவில்லை. இதை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் மேல்முறையீடு செய்தனர்.

இதில் மட்டை முதலில் கால்காப்பில் படுவது போல் தெரிந்தது. ஆனால் பக்கவாட்டு கோணத்தை பார்த்த போது பந்து மட்டையை நெருங்கும் போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அவுட் கொடுத்தார்.

மட்டை கால்காப்பில் பட்டதால் அல்ட்ரா எட்ஜில் அதிர்வு ஏற்பட்டதா? அல்லது பந்து நெருங்கிய போது அதிர்வு ஏற்பட்டதா? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் ஒரு கோணத்தை மட்டும் பார்த்து கே.எல்.ராகுல் அவுட் எனது அறிவிக்கப்பட்டதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here