கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் சிவதாணு(67). சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அழுகிய நிலையில் அவரது உடலை வடசேரி போலீசார் மீட்டு நேற்று(நவம்பர் 21) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














