பேச்சிப்பாறை அணை அருகே கோதை ஆற்றில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் பாலத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை – ஜீரோ பாயிண்ட் சாலை துண்டிக்கப்பட்டது. தற்போது அங்கு செல்வதற்கு அருகில் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று (20-ம் தேதி) மாலை கடையாலுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்று பேச்சிபாறை பகுதியில் மாணவர்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும் போது, இந்த தற்காலிக பாதையில் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று ஆற்றில் இறங்கியது. மாணவர்கள் வாகனத்தில் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.














