கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது: இபிஎஸ்

0
181

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கள்ளக் குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுக. நமது தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக, அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கள்ளச் சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here