கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை இடைமலை கோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தோமஸ் (44) என்பவர் வந்திருந்தார். அவர் பேரூராட்சி செயலாளர்களைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். பணியாளர்கள் செயல் அலுவலர் சிறிது கழித்து வருவதாகக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தோமஸ் பேரூராட்சி தலைவர் மற்றும் செயலாளர்களை அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. ஊழியர்கள் கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ராணுவ வீரர் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தோமஸ் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுரேஷ் (44) மற்றும் குடிநீர் பணியாளர் ராபி (46) பெண் பணியாளர் டோரா (44) என்பவர்களைத் தாக்கியுள்ளார். டோரா காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தோமசைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.