குழித்துறை மறை மாவட்டத்திற்குட்பட்ட திருத்துவபுரம் மறை வட்டம் பொதுநிலையினர் பணிக்குழு சார்பில் மூத்த குடிமக்கள் தின விழா மேல்புறம் தூய காவல் தூதர்கள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மறைவட்ட முதன்மை பணியாளர் ஓய்சிலின் சேவியர் தலைமை வகித்தார். மறை மாவட்ட முதன்மை பணியாளர் பெனடிக்ட் முன்னிலை வகித்து பேசினார். திருத்துவபுரம் மறைவட்ட பொது நிலை நற்பணி குழு தலைவர் ஜஸ்டின் ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல், குழித்துறை மறைவட்ட அருள் பணி பேரவை துணைத் தலைவர் வர்கீஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் விழா மேடையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளம் அருட்பாளியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருத்துவபுரம் மறை வட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 ஆலயங்களில் இருந்து முதியவர்கள், பங்கு மக்கள், அருட் பணியாளர்கள், பேரவையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.