அருமனையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் வண்ணாத்திப் பாறை என்ற வனப்பகுதி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் ஆட்டுப்பட்டியில் இருந்து திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. விஜயகுமார் வெளியே வந்து பார்த்தபோது அப்போது பட்டியில் இருந்த ஒரு ஆட்டின் பாதி உடலை மர்ம விலங்கு தின்றுவிட்டது தெரிந்தது. இதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ஆடு கால்நடைகளை புலி என்று தொடர்ந்து வேட்டையாடி வந்தது. பின்னர் வனத்துறையினர் அந்த புலியை கூண்டு வைத்து பிடித்தனர். தற்போது மர்ம விலங்கின் நடமாட்டம் உள்ளது. புலியாக இருக்கலாம் என கிராம மக்கள் பயப்படுகின்றனர். எனவே கால்நடைகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.