நடிகர் விமலின் 35-வது படத்துக்கு ‘பெல்லடோனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் நேச்சுரல் ஹாரர் படமாக உருவாகும் இந்தப் படத்தை யூபோரியா பிலிக்ஸ் தயாரிக்கிறார்.
சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கும் இந்தப் படத்தில் தேஜஸ்வினி சர்மா கதாநாயகியாகவும் இன்னொரு நாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னமும் நடிக்கின்றனர். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறும்போது, “இந்த படம் விமலுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். வழக்கமான ஹாரர் படமாக இது இருக்காது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.














