பஞ்சாபில் புதிய மாடல் சட்டம் ஒழுங்கு: டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் உறுதி

0
114

பஞ்சாப் காவல் துறையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைப்பதற்கு முன், சட்டம் ஒழுங்கு நிலை பரிதாபமாக இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் ஆதரவுடன் பஞ்சாப் காவல் துறையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். பஞ்சாப் காவல் துறையில் இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. பஞ்சாபில் புதிய மாடல் சட்டம் ஒழுங்கு ஏற்படுத்தப்படும். அதன் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here