புதுக்கடை: கோவில் கொள்ளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

0
180

புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் நேற்றுமுன்தினம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் இருதுறை இழுபறியால் முறையாக பூஜைகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை என்ற புகார் உள்ளது. மேலும் கோவிலில் காவலர்கள் இல்லை என்ற புகாரும் உள்ளது. 

இந்த நிலையில் இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கோவிலில் கொள்ளையடித்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இன்று 15-ம் தேதி மாலை பார்த்திப்புரம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார், முஞ்சிறை ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் குமார், பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, புதுக்கடை பேருராட்சி தலைவர் ஜாக்குலின் றோஸ் கலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here