தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் – ரித்திகா தம்பதி!

0
270

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பேறு காலம் நெருங்கிய காரணத்தால் ரோஹித் இந்தியாவில் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ரோஹித் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2015 டிசம்பரில் ரோஹித் மற்றும் ரித்திகா திருமண வாழ்க்கையில் இணைந்தனர். 2018-ல் அவர்களுக்கு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் பங்கேற்பாரா? – ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் ரோஹித் பங்கேற்பாரா அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளாரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவர் இந்தப் போட்டியில் விளையாடாத பட்சத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார். தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் உடன் கில், கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூவரில் ஒருவர் விளையாட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here