கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்’ என விமர்சித்தார்.
இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்” என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், ‘‘ஜமீர் அகமது கானை நான் ஒருபோதும் அவ்வாறு திட்டி யதில்லை. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் முன்னிலையில் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.