10 வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் வழங்கினார்

0
165

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியம், தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால், ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்தில் இருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1 கோடிக்கான காசோலை களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டத் துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கதலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி.கார்த்தி கேயன், இந்திய வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here