திருவட்டாறில் பஸ் ஸ்டாண்ட் ரூ. 2.55 கோடி செலவில் கட்டும் பணி 2023 பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை.
இதனால் பஸ் ஏறச்செல்லும் மக்கள் ரோட்டின் இரு பகுதியிலும் நெருக்கடியான நிலையில் பஸ்களுக்கு காத்துநிற்கின்றனர். எந்த வித நிழற்குடையோ, இருக்கையோ இல்லாததால் வெயில், மழையின்போது மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையோரம் தனியார் மது பார் அமைந்துள்ளதால் குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் பஸ்ஸ்டாண்ட் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.