கருங்கல்: பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

0
227

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் அருண் ஸ்ரீதரன் (32) கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். நேற்று அதை காணவில்லை. மாறாக அந்த இடத்தில் வேறு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது. 

இது குறித்து அருண் ஸ்ரீதரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று (12-ம் தேதி) குளச்சல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். அவர்களை தடுத்து விசாரித்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் அவருடன் வந்தவர் புதுக்காடுவெட்டி விளையை சேர்ந்த 18 வயது நபர் என்பது தெரிய வந்தது. 

இவர்கள் இருவரும் மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு பைக்கை திருடி அதை கப்பியறை கொண்டு சென்று அருண் ஸ்ரீதரன் வீட்டு முன்பாக நிறுத்திவிட்டு, அங்கு இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here