கடையாலுமூடு அருகே போக்கின்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாங்காய் பறித்து விற்கும் தொழிலாளி. இன்று (11-ம் தேதி) காலை மூக்கறைக்கல் என்ற பகுதியில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கூட்டமாக காட்டு பன்றிகள் வந்தன. அந்த பன்றிகள் ஜெயராஜை தாக்கியுள்ளன.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி ரப்பர் தொழிலாளர்கள் விரைந்து பன்றிகளை துரத்தினர். இதில் படுகாயமடைந்த ஜெயராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கடையாலுமூடு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.