ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது ‘அந்த நாள்’!

0
192

ஆர்யன் ஷாம், ஆதியா பிரசாத், இமான் அண்ணாச்சி, ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘அந்த நாள்’. விவி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி ஹீரோ ஆர்யன் ஷாம் கூறும்போது, “இது பில்லி சூனியப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம். டெக்னிக்கலாக சிறப்பாக வந்திருக்கிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பினோம். ஆறு விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. சென்சாருக்கு அனுப்பினோம். நரபலி விஷயம் இருப்பதால் பல இடங்களில் வெட்ட சொன்னார்கள். அதனால் நாங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றோம். அங்கு 4 இடங்களில் கட் கொடுத்தார்கள். அதை நீக்கினோம். பின்னர் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். வழக்கமாக ஹாரர் படம் என்றால் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். இது சீரியஸ் படமாகவே இருக்கும். வரும் 29-ம் தேதி வெளியாகிறது” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here