சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையக புதிய தலைவர் பொறுப்பேற்பு

0
254

சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

கமாடோர் சுரேஷ் கடற்படையில் பணிபுரிந்தபோது தளவாடங்களை கையாளுவது, படைகளை அனுப்புவது, செயல் திட்ட உத்திகளை வகுப்பது ஆகியவற்றில் போதிய அனுபவம் பெற்றவர். அத்துடன், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தேசிய பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் திறன் பெற்றவர்.

இவரது தலைமையின் கீழ், சென்னையில் உள்ள படைக்கல தலைமையகம், துருப்புகள் மற்றும் தளவாட இயக்கங்களை நிர்வகித்தல், சிவில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் தளவாட சேவைகளைப் பெறுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here