இரணியல்: வீட்டில் நகை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது

0
251

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கடந்த 18ஆம் தேதி திடீரென காணவில்லை. இதைக் குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நேற்று (நவம்பர் 6) இரணியல் போலீசார் மணக்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர் மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜான் ரென்சோ பிரபு (34) என்பதும், ராமச்சந்திரன் வீட்டில் குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்களை திருடியவர் என்பது தெரியவந்தது. 

இதே வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாரும் இல்லாத நேரத்தில் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து நான்கு பவுன் தங்கச் சங்கிலி, 2 குத்துவிளக்குகள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய பைக், ரொக்கப் பணம் பத்தாயிரம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here