போபால்: மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ம.பி.துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா நேற்று கூறியதாவது: மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வுக்கு 40 வயதில் 50 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. தவிர கூடுதலாக 245 உர விற்பனை மையங்கள் அமைப்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Latest article
கோட்டார் பகுதியில் 27 மது பாட்டில்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் நேற்று முன்தினம் வடலிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 76 வயதான ஏசுதாஸ் என்பவர் 27 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மதுபாட்டில்களை பறிமுதல்...
குமரி: விபத்து – வாலிபர் பலி; பெண் உட்பட 4 பேர் படுகாயம்
நேற்று அதிகாலையில் மண்டைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது ஜெப்ரின் ஜோ என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் உடையார்விளையை சேர்ந்த ஜான் பிரகாஷ் (22), ஆதித்தன் (21) மற்றும் இரு பைக்குகளில் இருந்த...
படந்தாலுமூடு: இறால் பண்ணை ஊழியர் குளியல் அறையில் உயிரிழப்பு
படந்தாலூமூடு பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த அனுப் (36) என்பவர், நேற்று குளியலறை கதவு பூட்டிய நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கதவை...








