கடந்த அக்டோபர் மாதத்தில் காற்று மாசு அதிகம் மிகுந்த நகரங்கள் குறித்து எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மைய (சிஆர்இஏ)ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், மிகவும் மாசடைந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில், டெல்லியில் உள்ள காற்றில் சராசரி அளவிடப்பட்ட நுண்துகள்களின் (பிஎம்2.5) செறிவு ஒரு கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராமாக உள்ளது. இதையடுத்து, மாசடைந்த முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து காசியாபாத் (110), முசாபர்நகர் (103) முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. மேலும், ஹப்பூர், நொய்டா, மீரட், சர்கிதாரி, கிரேட்டர் நொய்டா, குர்கான் மற்றும் பகதூர்கர் ஆகிய நகரங்கள் அனைத்தும் தேசிய தலைநகர் மண்டலத்தை (என்சிஆர்) பகுதியை சேர்ந்தவையாகவே உள்ளன.