பிஹார் மாநிலத்தின் ஜாமுயி மாவட்டத்தில் லகாபான் மற்றும் சிமுல்தாலா ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்டன.
இதனால் 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தன்பாத் – கயா வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.



