சூரத் நகரில் குடிநீர் தொட்டி இடிந்த விபத்தில் 8 பேர் கைது

0
56

குஜ​ராத் மாநிலம், சூரத் நகரின் தட்​கேஷ்வர் பகு​தி​யில் 11 மீட்​டர் உயரத்​தில் 11 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்டி கட்​டப்​பட்​டது.

14 கிராமங்​களுக்கு குடிநீர் வழங்கு​வதற்​காக ரூ.21 கோடி செல​வில் இது கட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில் திறக்​கப்​படு​வதற்கு முன் சோதனை முயற்​சி​யாக, அண்​மை​யில் இதில் சுமார் 9 லட்​சம் லிட்​டர் குடிநீர் நிரப்​பப்​பட்​டது. அப்​போது குடிநீர் தொட்டி இடிந்து விழுந்​தது. இது தொடர்​பாக ஒப்​பந்​த​தா​ரர்​கள், 2 அதி​காரி​கள் உள்ளிட்ட 8 பேரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here