Home தேசிய செய்திகள் மன்மோகன் சிங் மறைவுக்கு கர்நாடகாவில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு

மன்மோகன் சிங் மறைவுக்கு கர்நாடகாவில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு

0

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் டெல்லியில் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ”மன்மோகன் சிங் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. கர்நாடக அரசு சார்பில் 7 நாட்க‌ள் துக்கம் அனுசரிக்க‌ப்படும்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்வரும், மாநில தலைவருமான‌ டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version