மகாவிஷ்ணுவின் 10 அவதாரம் பற்றி 7 அனிமேஷன் படங்கள்

0
285

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாகின்றன. ஹோம்பாளே பிலிம்ஸ் வழங்கும் இந்தப் படங்களை க்ளீம் புரொடக் ஷன்ஸ்தயாரிக்கிறது. இந்த யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘மகாவதார் நரசிம்மா’ ஜூலை 25ல் வெளியாகிறது. இதையடுத்து, மகாவதார் பரசுராம் (2027), மகாவதார் ரகுநந்தன் (2029), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035), மகாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகின்றன.

இதுபற்றி ஹோம்பாளே பிலிம்ஸின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ”காலத்தையும், எல்லைகளையும் கடந்த, கதை சொல்லலை நாங்கள் நம்புகிறோம். மகாவதார் உடன்விஷ்ணுவின் புனித அவதாரங்களை வியக்க வைக்கும் அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்கும் சினிமாடிக் யுனிவர்ஸை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்தியாவின் ஆன்மீக மரபுக்கான எங்கள் காணிக்கை” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here