சத்தீஸ்கரில் 66 நக்சலைட்கள் சரண்: பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் மறுவாழ்வுக்கு திரும்பினர்

0
159

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில் 49 பேர் பற்றி தகவல் தெரி​விப்​போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர நடவடிக்கை எடுத்​து வருகிறது. நக்​சல் வேட்​டைக்கு என மத்​திய ஆயுதப்​படை மற்​றும் மாநில போலீ​ஸில் சிறப்பு படைகள் உரு​வாக்​கப்​பட்​டன. இவர்களு​டன் துணை ராணுவப்​படை​யினரும், விமானப்​படை ஹெலி​காப்​டர் உதவி​யுடன் தீவிர தேடுல் வேட்​டை​யில் ஈடு​பட்டு வருகின்றனர்.

பாது​காப்பு படை​யினரின் நடமாட்​டத்தை கண்​காணிக்க நக்​சலைட்​கள் ட்ரோன்​களை​யும் பயன்​படுத்தி வந்​தனர். இதையடுத்து அவர்​களுக்கு ட்ரோன்​கள் விநி​யோகித்து பயிற்சி அளித்த நபர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். பாது​காப்பு படை​யினரின் அதிரடி நடவடிக்​கை​யால், நக்​சல் அமைப்​பின் முக்​கிய தலை​வர்​கள் எல்​லாம் தேடுல் வேட்​டை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதனால் இதர நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்து வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கரின் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் 25 நக்​சலைட்​களும், தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 15 நக்​சலைட்​களும், கன்​கெர் மாவட்​டத்​தில் 13 பேரும், நாராயண்​பூர் மாவட்​டத்​தில் 8 பேரும், சுக்மா மாவட்​டத்​தில் 5 பேரும் பாது​காப்பு படை​யினர் முன் நேற்று சரணடைந்தனர். இவர்​களில் 27 பேர் பெண்​கள் ஆவர்.

பிஜப்​பூரில் சரணடைந்த 25 நக்​சலைட்​களில் 23 பேரின் தலைக்கு மொத்​தம் ரூ.1.15 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவர்​களில் ஒடிசா மாநில குழு தலை​வர் ரமணா இர்​பா​வின் தலைக்கு ரூ.25 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இவரது மனைவி ரமே கல்மு பற்றி தகவல் அளிப்​பவருக்கு ரூ.8 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. நக்​சலைட் அமைப்​பில் முக்​கிய பதவி​களில் இருந்தவர்கள் பலருக்கு ரூ.8 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவர்​கள் அனை​வரும் தற்​போது தாங்​களாகவே சரணடைந்​துள்​ள​தாக சத்தீஸ்கர் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

ரூ.50,000 உதவித் தொகை: இவர்​களுக்கு மாநில அரசின் நக்​சலைட் மறு​வாழ்வு உதவி திட்​டத்​தின் கீழ் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்​கப்​பட்​டது. நக்​சலைட்​களின் மறு​வாழ்​வுக்​காக சத்​தீஸ்​கர் அரசு ‘உங்​கள் நல்ல கிராமம்’ என்ற திட்​டத்தை தொடங்​கி, தொலை​தூர கிராமங்​களில் வளர்ச்சிப் பணி​களை செய்து வரு​கிறது. இத்​திட்​ட​மும், பஸ்​தர் போலீ​ஸார் தொடங்​கி​யுள்ள மறு​வாழ்வு திட்​ட​மும் தங்​களை மிக​வும் கவர்ந்​துள்​ள​தாக சரணடைந்​தநக்​சலைட்​கள்​ தெரி​வித்​து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here