கர்நாடகாவில் லாரி மோதியதில் பேருந்து தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு

0
14

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கர்நாடக போலீஸார் கூறியதாவது: ஆம்னி பேருந்தில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் நவ்யா, மானசா, ராஷ்மி, பிந்து, கிரியா, உ.பி. லாரி ஓட்டுநர் குல்தீப் யாதவ் ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

உயிர் தப்பிய பயணிகள் சிலர் கூறுகையில், “இரவு நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். ஓட்டுநரும், உதவியாளரும் பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பிவிட்டனர். சிறிது நேரத்துக்குள் தீ மளமளவென்று பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பயணிகளால் தப்பிச் செல்ல முடியவில்லை” என்றனர்.

பேருந்து விபத்தில் பயணிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல் வர் சித்தராமையா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: கர்நாடகா வின் சித்ரதுர்கா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.

கர்நாடக முதல்வர் சித்த ராமையா: ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here