Home மாநில செய்திகள் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறப்பு

27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறப்பு

0

சென்​னை​யில் 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், பயணி​களின் வசதிக்​காக, கூடு​தலாக 55 நகரும் படிக்​கட்​டு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில், 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் காரண​மாக, மெட்ரோ ரயில்​களில் பயணிப்​போர் எண்​ணிக்கை நாள்​தோறும் உயர்​கிறது. பயணி​களின் எண்​ணிக்கை உயர்​வதற்கு ஏற்ப, அவர்​களின் தேவை​களை, வசதி​களை நிறைவேற்​று​வது அவசி​ய​மாகிறது.

அந்த வகை​யில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்​டம் மற்​றும் அதன் நீட்​டிப்பு வழித் தடத்​தில் உள்ள 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், 55 நகரும் படிக்​கட்​டு​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

இந்த கூடு​தல் வசதி​யை, மெட்ரோ ரயில் பயணி​கள் திறந்து வைத்​தனர். இந்​நிகழ்​வில், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் இயக்​குநர் மனோஜ் கோயல், (அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம்), தலைமை ஆலோ​சகர் கோபி​நாத் மல்யா (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு), பொது​மேலா​ளர் எஸ்.சதீஷ் பிரபு (இயக்​கம் மற்​றும் பராமரிப்​பு) உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த கூடு​தல் வசதி​யின் மூலம், ஏற்​க​னவே இருந்த 226 நகரும் படிக்​கட்​டு​களு​டன், புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள 55 நகரும் படிக்​கட்​டு​களும் சேர்த்து நகரும் படிக்​கட்​டு​களின் எண்​ணிக்கை தற்​போது 281 ஆக உயர்ந்​து உள்ளன.

குறிப்​பாக, திரு​மங்​கலம் மற்​றும் அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 5 நகரும் படிக்​கட்​டு​களும், வடபழனி மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் 4 நகரும் படிக்​கட்​டு​களும், ஆயிரம் விளக்​கு, அண்ணா நகர் கோபுரம் மற்​றும் அரசினர் தோட்​டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 3 நகரும் படிக்​கட்​டு​களும், ஏஜி-டிஎம்​எஸ், ஈக்​காட்​டு​தாங்​கல், கிண்​டி, தியாக​ராஜ கல்​லூரி, விம்​கோநகர் பணிமனை, சென்ட்​ரல், வண்​ணாரப்​பேட்​டை, எல்​ஐசி, நேரு பூங்​கா, விமான நிலை​யம், அசோக் நகர், எழும்​பூர், நந்​தனம் ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா 2 நகரும் படிக்​கட்​டு​களும், பரங்​கிமலை, சின்​னமலை, உயர்​நீ​தி​மன்​றம், மண்​ணடி, தேனாம்​பேட்​டை, தண்​டடை​யார்​பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் தலா ஒரு நகரும் படிக்​கட்​டு​களும் கூடு​தலாக நிறு​வப்​பட்​டுள்​ளன.

இந்த நகரும் படிக்​கட்​டு​களை நிறு​வி செயல்​படுத்​தும் பணி பெரும் சவாலாக இருந்​தது. ஆனாலும், மெட்ரோ ரயில் சேவை​கள் இல்​லாத நேரங்​களில் இப்​பணி​களை மேற்​கொண்​டு, வெற்​றிகர​மாக நிறைவு செய்​தனர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version