கோதாவரி ஆற்றில் 5 வாலிபர்கள் உயிரிழப்பு

0
87

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோதாவரி ஆற்றில் நேற்று அதிகாலை புனித நீராட சென்ற 5 வாலிபர்கள் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரு, தாள்ளபூடி மற்றும் ராஜமுந்திரி பகுதிகளை சேர்ந்த சுமார் 11 வாலிபர்கள், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை தாடிபூடி எனும் இடத்தில் கோதாவரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற துர்கா பிரசாத் (19), சாய்கிருஷ்ணா (19), பவன் (19), அசோக் (19) மற்றும் டி.பவன் (17) ஆகிய 5 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கொவ்வூரு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்கள் அனைவரும் தாள்ள பூடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள். இதனால், தாள்ள பூடி கிராமமே நேற்று சோகத்தில் மூழ்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here