5 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதி இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த 10ம் தேதி திரும்பியுள்ளனர்.
வழக்கமாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். எனவே, 5 மாநில தேர்தல் தேதி இன்று (மார்ச் 12) வெளியாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.














