Home மாநில செய்திகள் தேனி சிறையிலிருந்து தப்பிய 5 பேர் ஆண்டிப்பட்டியில் ஆஜர்: நவ.10 வரை நீதிமன்றக் காவல்

தேனி சிறையிலிருந்து தப்பிய 5 பேர் ஆண்டிப்பட்டியில் ஆஜர்: நவ.10 வரை நீதிமன்றக் காவல்

0

தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் முதற்கட்டமாக 5 பேர் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நேற்றிரவு (அக்.27) ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் 10-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு போலீஸாரை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இதில் சிறை அருகே புதர்பகதியில் மறைந்திருந்த பிரவீன்குமாரை முதற்கட்டமாக போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து சிலம்பரசனை போடி திருமலாபுரம் விலக்கு என்ற இடத்திலும், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார் ஆகியோரை பல்வேறு இடங்களிலும் கைது செய்தனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் என்பவர் நேற்று பிற்பகலில்ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற போது க.விலக்கு என்ற இடத்தில் போலீஸார் கைது செய்தனர்.

முதற்கட்ட தேடுதல் வேட்டையில் இந்த 5 பேரும் சிக்கினர். இதே போல் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்துஇளங்கோவன், கார்த்திக்ராஜா, சோலைமுகிலேஸ்வரன் ஆகிய 8 பேரையும் நேற்று மாலையில் கைது செய்தனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக பிடிக்கப்பட்ட 5 கைதிகளையும் நேற்றிரவு ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பாசில்முகமது இவர்களை நவ.10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மீதமுள்ள 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதுவரை பிடிபடாமல் உள்ள 4 பேர் அம்மச்சியாபுரம் கரட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு உறுதியான தகவல் கிடைத்துளளது. ஆகவே இன்று பிற்பகலுக்குள் அவர்களும் பிடிபட வாய்ப்புள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version