லக்னோவில் இன்று 4-வது டி20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

0
20

இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்​பாய் ஏகானா மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் கட்​டாக்​கில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடர்ந்து முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்​னர் தரம்​சாலா​வில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் தொடரில் இந்​திய அணி 2-1 என்ற கணக்கில் முன்​னிலை வகிக்​கிறது.

இந்​நிலை​யில் 4-வது ஆட்​டம் லக்​னோ​வில் இன்று நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் தொடரை கைப்​பற்​றும். கடந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் ஒட்டுமொத்த பந்​து​வீச்சு துறை​யும் சிறப்​பாக செயல்​பட்டு இருந்தது.

அதேவேளை​யில் பேட்​டிங்கில் மீண்​டும் பார்​முக்கு திரும்​புவதற்​கான கிடைத்த வாய்ப்பை கேப்​டன் சூர்​யகு​மார் யாதவும், துணை கேப்​டன் ஷுப்​மன் கில்​லும் பயன்படுத்திக்கொள்​ளத் தவறினர். அந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 118 ரன்​கள் இலக்​கையே துரத்​தி​யது.

எந்​த​வித அழுத்​த​மும் இல்​லாத நிலை​யிலும் ஷுப்​மன் கில் 28 பந்துகளை சந்​தித்து 28 ரன்​கள் மட்​டுமே எடுத்​தார். சூர்​யகு​மார் யாதவ் 11 பந்​துகளில் 12 ரன்​கள் சேர்த்து வழக்​க​மான தனது ஷாட்டை விளை​யாடி விக்​கெட்டை தாரை​வார்த்​தார். இவர்​கள் இரு​வரிடம் இருந்து கடந்த ஓராண்​டாகவே சிறந்த செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. அதி​லும் இந்த சீசனில் சூர்​யகு​மார் யாதவ் 2 ஆட்​டத்​தில் மட்​டுமே 20 பந்​துகளுக்கு மேல் தாக்​குப்​பிடித்​துள்​ளார்.

டி 20 உலகக் கோப்பை தொடருக்கு இன்​னும் ஒருசில மாதங்​களே இருப்​ப​தால் சூர்​யகு​மார் யாத​வும், ஷுப்​மன் கில்​லும் விரை​வில் பார்​முக்கு திரும்​புவ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் சொந்த காரணங்​களுக்​காக அவசர​மாக வீடு திரும்பி இருந்த ஜஸ்​பிரீத் பும்ரா குறித்து எந்த தகவலை​யும் பிசிசிஐ வெளியிட​வில்​லை. இதனால் அவர், இன்​றைய ஆட்​டத்​தி​லும் களமிறங்​கு​வது சந்​தேகம்​தான்.

அதேவேளை​யில் உடல்​நலமின்மை காரண​மாக அக்​சர் படேல் வில​கிய நிலை​யில் ஷாபாஸ் அகமது சேர்க்​கப்​பட்​டுள்​ளார். எனினும் குல்​தீப் யாதவ் இருப்​ப​தால் ஷாபாஷ் அகமதுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்​பது அரிது​தான்.

எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி தொடரில் 1-2 என பின்​தங்கி உள்​ளது. அந்த அணி இன்​றைய ஆட்டத்​தில் தோல்​வியை சந்​தித்​தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடு​தல் முனைப்​புடன் செயல்​படக்​கூடும்.

அணி​யில் உள்ள பிர​தான வீரர்​கள் சுழற்சி முறை​யில் களமிறக்கப்​படு​வ​தால் தொடர்ச்​சி​யாக நிலை​யான செயல் திறனை வெளிப்​படுத்த முடி​யாமல் தென் ஆப்​பிரிக்கா நெருக்கடியான நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

கடந்த டி 20 உலகக் கோப்பை இறு​திப் பேட்​டிக்கு பின்​னர் தென் ஆப்​பிரிக்க அணி பங்​கேற்ற 28 டி 20 ஆட்​டங்​களில் 18-ல் தோல்வியை சந்​தித்து உள்​ளது. நிலை​யான அணிச் சேர்க்​கையை தேடிக்​கொண்​டிருக்​கும் தென் ஆப்​பிரிக்க அணி நிர்​வாகம், தொடர்ந்து மாற்​றங்​களைச் செய்து வரு​கிறது.

அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக இன்​றைய ஆட்​டம் உட்பட தென் ஆப்​பிரிக்க அணிக்கு 5 ஆட்டங்கள் மட்​டுமே எஞ்​சி​யுள்​ளன.

இந்​திய அணிக்கு எதி​ரான தொடருக்கு பின்​னர் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் தென் ஆப்​பிரிக்க அணி விளை​யாட உள்​ளது. இதனால் இந்த 5 ஆட்​டங்​களும் அந்த அணிக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக மாறி உள்​ளது. ஏனெனில் இந்த போட்​டிகளில் இருந்தே டி 20 உலகக் கோப்​பைக்​கான சிறந்​த வீரர்​களை தென்​ ஆப்​பிரிக்​க அணி தேர்வு செய்​யும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here