நகைப்பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
11

நகைப்​பட்​டறை​யில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்​தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். சென்னை சவு​கார்​பேட்​டை, சிங்​கண்​ணன் தெரு​வில், 4 மாடி கட்​டிடத்​தில் நகைப்​பட்​டறை ஒன்று செயல்​பட்டு வந்​தது.

மேற்கு வங்க மாநிலம், கொல்​கத்​தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்​பவர் இந்த நகைப்​பட்​டறையை நடத்தி வந்​தார். இந்த பட்​டறை​யில் வடமாநிலத்​தைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் தங்கி வேலை பார்த்து வந்​தனர்.

இங்கு பழைய,புதிய தங்​கத்தை உருக்கி புதிய நகைகள் தயாரித்து சென்​னை​யில் உள்ள நகைக்​கடைகளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், கடந்த 25-ம் தேதி இரவு ஊழியர்​கள் நகைகளை வழக்​கம்​போல் உருக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது எதிர்​பா​ராத வித​மாக அங்​கிருந்த சிலிண்​டரில் காஸ் கசிவு ஏற்​பட்டு தீ விபத்து ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் 2 சிலிண்​டர்​கள் வெடித்து சிதறியது.

இதில், ஏற்​பட்ட தீ விபத்​தில் கட்​டிடத்​தின் ஒரு பகுதி இடிந்து ஊழியர்​கள் 7 பேரும் தீயில் சிக்கி படு​காயமடைந்​தனர். காயமடைந்த அனை​வரை​யும் தீயணைப்பு வீரர்​கள் மீட்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நகைப்​பட்​டறை உரிமை​யாளர் சுமன் பால் பி சோகித் உயி​ரிழந்​தார்.

மீத​முள்ள நகைப்​பட்​டறை ஊழியர்​களான மேற்​கு​வங்​கத்​தைச் சேர்ந்த அரவிந்த் தாக்​கல் (27), ஜாந்தோ இந்​திரஜித், சிமந்​தோ​மால் (47), ராகேஷ் (26) ஆனந்த் (32), சூரஜ் (25) ஆகிய 6 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

இதில், சிமந்​தோ​மால், ராகேஷ், சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர். ஜாந்தோ இந்​திரஜித், ஆனந்த் ஆகிய இரு​வருக்​கும் தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. விபத்​துக்கு சதிச் செயல் ஏதேனும் காரண​மா? என யானைக​வுனி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here