இந்தியா உடனான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன்!

0
108

 இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். கஸ் அட்கின்சன் கடந்த மே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்

இங்​கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்​டன்), ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஆலி போப், ஹாரி புரூக், ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்​ஸ், ஜேமி ஓவர்​டன், ஷோயிப் பஷிர், பிரைடன் கார்​ஸ்,
சாம் குக், ஜோஷ் டங்க், ஜோஃப்ரா ஆர்ச்​சர்​, கஸ்​ அட்​கின்​சன்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here