மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு

0
18

இந்து சமய அறநிலை​யத் துறைகட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் பக்​தர்​களிட​மிருந்து காணிக்​கை​யாகப் பெறப்​பட்டு பயன்​படுத்த இயலாத பொன் இனங்​களில் கல், அரக்​கு, அழுக்குநீக்​கப்​பட்​டு, மும்​பை​யில் உள்ள மத்​திய அரசின் தங்கஉருக்​காலை​யில் உருக்​கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்​டுத் திட்​டத்​தின் கீழ் முதலீடு செய்​யப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் வகை​யில் ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் துரை​சாமி ராஜு, ரவிச்​சந்​திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்​காணிப்​பில் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இத்​திட்​டத்​தின் கீழ், இது​வரை 21 கோயில்​களின் பயன்​பாடற்ற தங்க நகைகளை உருக்கி கிடைக்​கப் பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்​லிகி​ராம் தங்​கக் கட்​டிகள் எஸ்​பிஐ-​யின் தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் அந்​தந்த கோயி​லின் பெயரில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் ஆண்​டுக்கு ரூ.17 கோடியே 76 லட்​சத்து 85 ஆயிரம் வட்டி கிடைக்​கப் பெறுகிறது.

இந்த தொகை அந்​தந்த கோயி​லின் வளர்ச்​சிப் பணி​களுக்கு செல​விடப்​பட்டு வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக நேற்று இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி துரை​சாமி ராஜு முன்​னிலை​யில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு காணிக்​கை​யாக கிடைக்​கப்​பெற்று பயன்​பாடற்ற 34 கிலோ 375 கிராம் எடை​யுள்ள தங்க நகைகளை உருக்கி சுத்த தங்​கக் கட்​டிகளாக மாற்ற எஸ்​பிஐ-​யிடம் ஒப்​படைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் இந்து சமய அறநிலை​யத் துறை இணை ஆணை​யர்​கள் இரா.​வான்​ம​தி, பெ.க.கவெனி​தா, எஸ்​பிஐ சென்னை மத்​திய மண்டல மேலா​ளர் இன்​பரசு உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here